மதுரை மாநகராட்சியில் 150 கோடிக்கு மேல் சொத்து வரி முறைகேடு நடந்ததாக எழுந்த புகார், தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து 5 மண்டல, 2 நிலைக் குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர். மேயர் கணவர் பொன் வசந்த் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். மாநகராட்சி உதவி கமிஷனர், பில் கலெக்டர் என 16-க்கும் மேற்பட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி மதுரை டி.ஐ.ஜி. அபிநவ்குமார் தலைமையில் விசாரணை நடக்கிறது. சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இந்நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி இந்திராணி பொன்வசந்த் சென்னைக்கு அழைக்கப்பட்ட நிலையில், குடும்பச் சூழ்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக அமைச்சர் நேருவிடம் கடிதமளித்தார்.
மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா வைத் தொடர்ந்து அடுத்த மேயர் யார்? என்ற பேச்சு கட்சி வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது.
புதிய மேயருக்கு கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.தியாகராஜன், மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களை சிபாரிசுசெய்ய, தி.மு.க. கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
மேயராக இருந்தவர் முக்குலத்து சமூகம் என்பதால் மீண் டும் அதே சமூகத்தை சேர்ந்தவரே மேயராக வரவேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கி நிற்கிறது. இதில், நகர மாவட்டச் செயலாளர் தளபதி தனது அக்காவான இந்திராகாந்தியை முன்னி றுத்த, அவருக்கு வயதாகிவிட் டது என்று கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது. வார்டு 79 ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த லக்ஷிகா தரப்பினர் தலைமை வரை சென்று கேட்டுள்ளனர். அதற்கு தளபதி தரப்பு எதிர்ப்புத்தெரிவிப்பதாக தெரிகிறது. அமைச்சர் மூர்த்தி, வாசுகி சசிகுமாரை மேயராக்க மீண்டும் முயற்சிக் கிறார். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வாசுகி வேண்டாம் என்கிறாராம். கடைசியில் அமைச்சர் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுடன் நடத்திய ஆலோசனை யில் மூர்த்தியின் கையே ஓங்கியிருப்பதாகத் தெரிகிறது. வாசுகி சசிகுமாரே மதுரை மேயராக வர அதிகமான வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படு கிறது. சமூகரீதியான பிரச்சனைக்கு ஈடுகொடுக்கும் விதமாக ராஜினாமா செய்த 5 மண்டலத் தலைவர்கள் பதவிகளில் முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, ஒரு மண்டலத் தலைவர் பதவியை முஸ்லிம் சமூகத்துக்கு கொடுக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது
கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய மண்டல தலைவர்களுக்கு முறையே 7-வது வார்டு இராமமூர்த்தி, 8-வது வார்டு ராதிகா, 16-வது வார்டு ஜெயராஜ், 17-வது வார்டு ராஹினி, 32-வது வார்டு விஜயா மொவ்ஸ்மி, 61-வது வார்டு செல்வி, 49-வது வார்டு சையது அபுதாஹீர், 54-வது வார்டு நூர்ஜஹான், 70-வது வார்டு அமுதா, 74-வது வார்டு சுதன், 79-வது வார்டு லக்ஷிகாஸ்ரீ, 84-வது வார்டு போஸ் முத்தையா, 95-வது வார்டு இந்திராகாந்தி ஆகியோரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்படுகிறது.